Anaadhi Devan

அநாதி தேவன்

Artist: James Vasanthan

Album: Iravin Amaithiyil Yesuvodu

Category: General

Language: Tamil - தமிழ்


By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
அனாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்தியப் புயங்கள் உன் ஆதாரமே

இந்த தேவன் என்றென்றும் உள்ள
சதாகாலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்

காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார்
தூய தேவ அன்பே
இவ்வனாந்திரத்தில் நிழல் கொடுத்து உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார்

கானகப் பாதை சூழும் இருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
அரும் நீரூற்றாய் மாற்றினாரே

கிருபை கூர்ந்து மனது உருகும்
தூய தேவ அன்பே
உன் சமாதானத்தின் உடன்படிக்கைகளை
உண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார்

வறண்ட வாழ்க்கை செழிப்பாய் மாறும்
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
துயரமும் தவிப்பும் ஓடிடும்
Credits

Original Song: Sis Sarah Navaroji
Orchestration: James Vasanthan
Singer:James Vasanthan
Programming: Vibin Baskar
Studio: Miracle Sound Bay
Mix & Master: Vibin Baskar