UMMAIYAE THAAN

உம்மையே தான்

Artist: Pr.James

Album: Vidivelliye-2

Category: General

Language: Tamil - தமிழ்


By downloading, you agree to our Terms and Conditions.

Lyrics
உம்மையே தான் உம்மையே தான்
என் உள்ளம் வாஞ்சிக்குதே
உம்மையே தான் உம்மையே தான்
என் உள்ளம் வாஞ்சிக்குதே
என் நேசரே என் யேசுவே
உமக்காக உள்ளம் ஏங்குதே
உமைகாண என்றும் ஏங்குதே

உறங்காத எந்தன் கண்கள் உமை காண வாஞ்சை கொண்டு
உம் இல்லம் தேடி வந்ததே
தணியாத தாகத்தோடு அலைபாயும் மானைப்போலே
உம் வசனம் பருக வந்ததே
உறங்காத எந்தன் கண்கள் உமை காண வாஞ்சை கொண்டு
உம் இல்லம் தேடி வந்ததே
தணியாத தாகத்தோடு அலைபாயும் மானைப்போலே
உம் வசனம் பருக வந்ததே
என் நேசமே என் பிரியமே
உமதன்பு ஒன்றே போதுமே
என் நேசமே என் பிரியமே
உமதன்பு ஒன்றே போதுமே

மழை வேண்டி வானம் பார்க்கும் பயிர் போல எந்தன் மனம்
உம் ஆசீர் வேண்டி வந்ததே
தடுமாறும் எந்தன் கால்கள் உம் வார்த்தை தீபம் கண்டு
முன்னேற வாஞ்சை கொண்டதே
மழை வேண்டி வானம் பார்க்கும் பயிர் போல எந்தன் மனம்
உம் ஆசீர் வேண்டி வந்ததே
தடுமாறும் எந்தன் கால்கள் உம் வார்த்தை தீபம் கண்டு
முன்னேற வாஞ்சை கொண்டதே
என் ஜீவனே என் சுவாசமே
உமதண்டை என்னை சேருமே
என் ஜீவனே என் சுவாசமே
உமதண்டை என்னை சேருமே
Credits

Revival Waves of Christ
jamesb@revivalwaves.org