Lyrics
கூடிச் சேருவீர் ஒன்றாகத் தேடிச் செல்லுவீர்
உள்ளத்தில் இயேசுவின்பால் அன்புகொண்டோர் யாரும் கூடுவீர் - 2
கல்வாரிக்கருகில் கூடுவீர் - (2)
1. சிறுவர் நடுவர் முதுவர் யாரும் சேர்ந்து கூடட்டும்
உள்ளம் மட்டும் ஒரு எண்ணத்தால் பொருந்தி நிற்கட்டும் - 2
துதியின் கீதம் எழும்ப ஒன்றாய்ப் பாடிச் செல்லட்டும்
அந்தகார சக்தி யாவும் அசைந்து ஒழியட்டும் – ஆகையால் - 2
2. கல்வாரிக் கருகில் வந்தோர் அன்பால் நிறைவார்
விகற்ப மின்றி எவரிடமும் சீராய்ப் பழகுவார் - 2
அன்பு நெருக்கி ஏவ அவர் சேவை செய்குவார்
கல்வாரியில் அன்பை அன்றி யாது காணுவாய்? - ஆகையால் - 2
3. இயேசுவை அறியார் உலகில் நிலவும் நாள்மட்டும்
‘மிஷனரிகள்’ என்ற வார்த்தைப் பேசப்படட்டும் - 2
தியாகம் புரிவார் மேலும் மேலும் எழும்பி வரட்டும்
இயேசுவின் உள்ளம் அதனால் பூரிப்பாகட்டும் - ஆகையால் - 2
Credits
Produced by Bro.Emil Jebasingh