Lyrics
திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
உமதன்பைக் கண்டடைந்தேன்
தேவ சமூகத்திலே --(2)
என்னை நோக்கி கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும் --(2)
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே --(2)
--திருப்பாதம்
மனம் மாற மாந்தன் நீரல்ல
மனவேண்டல் கேட்டிடுவீர் --(2)
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன் --(2)
--திருப்பாதம்
என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும் --(2)
உமக்காய் யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே --(2)
--திருப்பாதம்
Thiruppaatham nambi vandhen
Kirubai nirai yesuve
Umathanbai kandadaindhen
Deva samugathile --(2)
-- Thiruppaatham
Ennai nokki kooppidu enreer
Innal thunba nerathilum –(2)
Karuthaai visaarithu yendrum
Kanivodennai nokkidume –(2)
-- Thiruppaatham
Manam maara maandhan neeralla
Mana vendal kettiduveer –(2)
Yenathullam ootri jebiththey
Yesuve ummai andiduven –(2)
-- Thiruppaatham
Ennai kaividaathirum naadhaa
Yenna nindhai neridinum –(2)
Umakkaai yaavum sagippen
Umathu belan eenthidume –(2)
--Thiruppaatham
Credits
Music by : Bro. James Vasanthan