Lyrics
ரெண்டாயிரம் ஆண்டு ஆகியும்
,இந்தியா இயேசுவை அறியலையே
ரெண்டாயிரம் ஆண்டு ஆகியும் ,இப்பூமி இயேசுவை அறியலையே
இன்றைய
விசுவாச கூட்டமும்,
இன்பத்தை தேடி அலைகின்றதே -ரெண்டாயிரம்..
பொருளாசை என்னும் அரக்கனும்
பொலிவுடனே மனதினை ஆள்கின்றதே -2
பொல்லாப்பு செய்யும் கைகளும்,
பொய் தீர்க்க தரிசனமும் பெருகிடுதே -2 -
கள்ளரின் உபதேச புரட்டலும் ,
கர்த்தரின் வார்த்தையே மிதிக்கிறதே -2
கல்வாரி நாயனின் கதறலும்,
கவனிப்பாரற்று போகிறதே – 2
அன்பு கூற ஆளை தேடுவோரே,
அசைத்திடும் அகிலத்தின் சபைகளையே -2
அழைப்பின் சத்தம் கேட்டிடுவோம்
அர்பணிப்போம் அவர் தம் பணிக்கெனெவே -2
தேவனே இரங்கிட மாட்டீரோ
தேசம் உம்மை அறியனுமே – 2
தேவை இன்றே புறப்படுவோம்
தேடுவோம் காணாமல் போனவரை -2
Rendayiram aandagiyum
India yesuve ariyalaye
Rendayiram aandagiyum
Ippumi yesuve ariyalaye
Indraya
visuvaasa kutamum
Inbathai thedi alaikindrathe
Porulasai ennum arakanum
Polivudane manathinai aalkidrathe -2
Pollappu seyyum kaikalum
Poi theerkka tharisanamum perukiduthe -2
Kallarin ubadhesa purattalum
Kartharin vaarthaiye mithikirathe -2
Kalvari naayanin katharalum
Kavanippaaratru pokirathe – 2
Anbu koora aalai theduvorai
Asaithidum akilathin sabakalaiye -2
Azhaipin satham ketiduvom
Arpanipom avar tham panikeneve -2
Dhevanai irangida maatiro
Desam ummai ariyanume – 2
Thevai endre purapaduvom
Theduvom kaanamal ponavarai -2
Credits
Sung by : Bro. Augustin Jebakumar
Produced by : GEMS