Lyrics
Inba Geetham Thunba Neram
Eentheerae En Yeshuve
Kolkatha Paathai Siluvai Sumanthae
Karthavae Ummandai Vanthaen
Peruvellathin Pugalidam Nerae Perum
Kanmalai Nizhalae
Veesidum Kondal Kaatrukku Othukkae
Vattaatha Neerootum Neerae
Poraddamaana Pona Vazhnaazhil
Neeroddam Mothum Innalil
Mutrum Mudiya Vetri Azhitheer
Kutram
Kurai Neekki Kaatheer
Unthan Sareera Belaveena Neram
Yenthan Kirubaiye Pothum
Yentu Uraithu Yennai Anaithu
Yethanaiyo Nanmai Seytheer
Kalvaari Paathai Tholviyillaiyae
Karthavae Munnodi Neerae
Um Pin Nadanthae Ummai Thodarnthae
Unnatha Veeddai Adaivaen
Azhaithavarae Unmaiyullorae
Appadiye Jeyam Eevaar
Yeshuve Ummal Jeyam Arulum Yenkal
Pithavukku Sthothiram
இன்பகீதம் துன்பநேரம் ஈந்தீரே என் இயேசுவே
கொல்கொதா பாதை சிலுவை சுமந்தே
கர்த்தாவே உம்மண்டை வந்தேன்
1. பெருவெள்ளத்தின் புகலிடம் நீரே
பெரும் கன்மலை நிழலே
வீசிடும் கொண்டல் காற்றுக்கு ஒதுக்கே
வற்றாத நீருற்றும் நீரே
2. ஊளையிடும் ஓர் பாழும் நிலத்தில்
ஊக்கமுடன் என்னைத் தேடி
கண்டு உணர்த்தி கைதாங்கி நடத்தி
கண்ணின் மணிபோலக் காத்தீர்
3. துஷ்ட மிருகம் என்னை எதிர்த்தும்
கஷ்டம் வராது என்னை காத்தீர்
மந்தையின் மேய்ப்பன் தாவீதின் தேவன்
எந்தை என் தந்தையும் நீரே
4. போராட்டமான போன வாழ்நாளில்
நீரோட்டம் மோதும் இன்னலில்
முற்றுமுடிய வெற்றி அளித்தீர்
குற்றம் குறை நீக்கிக் காத்தீர்
5. உந்தன் சரீர பெலவீன நேரம்
எந்தன் கிருபையே போதும்
என்று உரைத்து என்னை அணைத்து
எத்தனையோ நன்மை செய்தீர்
6. கல்வாரி பாதை தோல்வியில்லையே
கர்த்தாவே முன்னோடி நீரே
உம் பின்நடந்தே உம்மை தொடர்ந்தே
உன்னத வீட்டை அடைவேன்
7. அழைத்தவரே உண்மையுள்ளோரே
அப்படியே ஜெயம் ஈவார்
இயேசுவே உம்மால் ஜெயம் அருளும்
எங்கள் பிதாவுக்கு ஸ்தோத்திரம்
Credits
Video link: https://www.youtube.com/watch?v=MepadtfsNzo